ADVERTISEMENT

UAE: 135 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான போதைப் பொருட்களைப் கைப்பற்றிய காவல்துறை..!

Published: 18 Jun 2022, 8:19 AM |
Updated: 18 Jun 2022, 8:19 AM |
Posted By: admin

ஷார்ஜா காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு 2021 முதல் 2022 மே மாதம் வரை 135 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து போலிஸ் அறிக்கையின்படி, 201 போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதவி உயர்வு வழக்குகளை அதிகாரிகள் கையாண்டதாகவும், 822 கிலோகிராம் படிகங்கள், 94 கிலோகிராம் ஹாஷிஸ், 251 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷார்ஜா காவல்துறை 81 போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியதாகவும், இது கடந்த ஆண்டை விட 58.8% அதிகம் என்றும் பயனாளிகளின் எண்ணிக்கையில் 37.8 சதவீதத்துக்கும் அதிகமானோர் விழிப்புணார்வு நிகழ்வுகளில்  கலந்துக்கொண்டதாகவும் அதிகாரிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT