ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு..!

Published: 24 Jun 2022, 8:02 AM |
Updated: 24 Jun 2022, 8:05 AM |
Posted By: admin

அமீரக அதிரபரான மதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் ஜயீத் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டுதலின் படி, ஆப்கானிஸ்தானுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம் இயங்கத் தொடங்கியுள்ளது, மேலும் அங்கு மருத்துவக் குழுவும் களத்தின் மருத்துவமனைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகாளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் தற்போதைய மோசமான நிலைமையை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகள் மற்றும் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானை சமீபத்தில் தாக்கிய நிலநடுக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க அதன் பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த உதவி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான இறப்புகள் மற்றும் காயங்களுக்குள் மக்கள் ஆளாகியுள்ளனர், குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT