ADVERTISEMENT

அமீரகத்தின் இன்றைய வானிலை அறிக்கையை வெளியிட்ட NCM..!! 47 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தகவல்..!!

Published: 6 Jun 2022, 8:37 AM |
Updated: 6 Jun 2022, 8:43 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அமீரகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்ற அறிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் படி, அமீரகத்தில் இன்று திங்கள்கிழமை (June 6) வானிலை தொடர்ந்து வெப்பமாகவும், மங்கலாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக வெப்பமாகவும், நாட்டின் சில பகுதிகளில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அமீரகத்தின் சில உள் பகுதிகளில் பகல் நேரத்தில் சில நேரங்களில் பார்வைக்கு மங்கலாக இருக்கும் என்றும், இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாளை செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு கடற்கரை பகுதியில் மேகங்கள் குறைவான உயரத்தில் தோன்றும் எனவும், இதனால் லேசானது முதல் மிதமான காற்று வீசும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் சிறிதாக இருக்கும் என்றும் NCM குறிப்பிட்டுள்ளது.