ADVERTISEMENT

UAE: ஈத் அல் அதாவை முன்னிட்டு ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 13 நாள் அதிரடி தள்ளுபடியில் விற்பனை தொடக்கம்..!

Published: 2 Jul 2022, 8:04 PM |
Updated: 2 Jul 2022, 8:04 PM |
Posted By: admin

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 13 வரை ஈத் அல் அதா காண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் இரண்டாவது பதிப்பு என்பதால் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை கொண்டிருக்கும் என்றும் இது நீண்டகாலம் நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்வை லிஸ் எனும் கண்காட்சி ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் பலவிதமான வாசனை திரவியங்கள், அபாயா வகைகள், ஆடை அணிகலன்கள், அழகு சாதனப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், நுகர்வோர் மின்னணு பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கடினமான பொருளாதார சூழ்நிலையில் ஈத் அல் அதா கண்காட்சி அறிமுகமானது.  இப்போது, ​​சில்லறை விற்பனைத்துறை கடுமையாகப் பின்னோக்கிச் சென்று, நுகர்வோர் செலவினம் அதிகரித்து வருவதால், இந்த கண்காட்சியின் இரண்டாவது பதிப்பில் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்வின் மூலம் சில்லறை விற்பனைத் துறை புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.  பொருளாதாரம் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளதால், சில்லறை விற்பனையாளர்கள் இப்போது பெரிய விற்பனை வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், மேலும் இந்தக் கண்காட்சி நிச்சயமாக சில்லறை வர்த்தகத் தொழிலுக்கு ஒரு முக்கியமானதாக இருக்கும் என்றுஉறுதியாக நம்புகிறேன்என்று எக்ஸ்போ சென்டரின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மித்ஃபா தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் இதுகுறித்து கூறிய லிஸ் கண்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்கப் வர்கீஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த கண்காட்சியில் 76,000 பார்வையாளர்கள் வருகைதந்ததாகவும் அதிக அளவு விற்பனையை பதிவு செய்ததாகவும் கூறினார், இந்த ஈத்அல் அதா கண்காட்சி ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.