அபுதாபியில் வாடகைக்கு குடியிருந்த ஒருவர் சட்டவிரோதமாக ஒரு வீட்டை பிரித்து நான்கு குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டதற்கு அவரிடம் இழப்பீடாக 510,000 திர்ஹம்ஸை விட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார். மேலும், வீட்டை சேதப்படுத்தியதன் காரணமாக வாடகைதாரர் மீது உரிமையாளர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, வாடகைத்தாரர், வீட்டு உரிமையாளரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார், ஆனால் அவரது மறுப்பு கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது. வீட்டை நான்கு பிரிவுகளாக மாற்றம் செய்து நான்கு குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டு வசூலித்ததாகவும் வீட்டைப் புதுப்பித்து மற்றும் பராமரிப்பதற்காக 300,000 திர்ஹம்ஸுக்கும் மேல் செவளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து அபுதாபி குடும்ப நீதிமன்றம், வீட்டு விதிகளை மீறியதற்காகவும், நான்கு குடும்பங்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டதற்காகவும், வீட்டை சேதம் செய்ததற்காகவும் வீட்டு உரிமையாளருக்கு, வாடைகத்தாரர் 300,000 திர்ஹம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உரிமையாளரின் சட்டச் செலவுகளையும் வாடகைதாரரே செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.