ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. ஷார்ஜா போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி நாளை முடிவடைகிறது..!

Published: 30 Jul 2022, 1:25 PM |
Updated: 30 Jul 2022, 1:25 PM |
Posted By: admin

ஷார்ஜா போக்குவரத்து அபராதத்திற்கு செலுத்தவேண்டிய தள்ளுபடி காலம் விரைவில் முடிவடைய இருப்பதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தின் அனைத்து அபராதங்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி ஜூலை 31 அன்று முடியவடைய இருப்பதாக என்று ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையமான SRTA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அனைத்து அபராதங்களும் SRTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செலுத்தலாம்:

  1. இணையதளம்: www.srta.gov.ae
  2. அல் அஸ்ராவில் உள்ள தலைமையக ஆணையங்கள்: கோர்ஃபக்கன் மற்றும் கல்பாவில் உள்ளன.

முன்னதாக கடந்த பிப்ரவரியில், ஜனவரி 1, 2020 முதல் அக்டோபர் 31, 2020 வரை வழங்கப்பட்ட அனைத்து அபராதங்களுக்கும் 50 சதவீத தள்ளுபடியை SRTA அறிவித்தது. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் தள்ளுபடி திட்டத்தில் அபராதங்களை செலுத்ததுமாறு SRTA தெரிவித்துள்ளது.