ஈத் அல் அதா காரணமாக ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் நான்கு நாள் வார இறுதிக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்கு திரும்பினர். இந்த வருடத்தின் மிக நீண்ட விடுமுறை நாட்களாக இந்த ஈத் அல் அதா விடுமுறை அமைந்தது. அதுபோலவே இந்த ஆண்டு மீண்டும் 4 நாட்கள் அதிகாரப்பூர்வ விடுமுறை அமைய உள்ளது. அதன்படி, இஸ்லாமியப் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் ஜூலை 30 சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்திற்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அதன்படி, டிசம்பர் 1, 2, 3 நாட்கள் விடுமுறையாக இருக்கும், மேலும் டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறையாக அமையும்.