ADVERTISEMENT

துபாயில் சிக்கித் தவிக்கும் தமிழரை மீட்டுத்தர அமைச்சருக்கு கோரிக்கை..!

Published: 7 Jul 2022, 2:25 PM |
Updated: 7 Jul 2022, 2:25 PM |
Posted By: admin

வெளிநாட்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பரங்கிப்பேட்டையை சேர்ந்தவரை கோதண்டபாணி மீட்டுத்தர வேண்டும் என அமைச்சர் மஸ்தானுக்கு அப்பகுதி துணை சேர்மன் ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அமைச்சர் மஸ்தானுக்கு அனுப்பியுள்ள மனுவில், கோதண்டபாணி என்பவர் துபாய் உள்ள சோனாப்பூர் கோல்டன் சன் லைன் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் ரீதியாக மிகவும் மோசமான நிலையில் உள்ளார். மேலும், அவரை சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிக்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிகிறது. அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, கோதண்டபாணியை, மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு, அந்த மனுவில், கூறப்பட்டுள்ளது.