அபுதாபியின் அல் மக்தா பாலத்தின் இரண்டு போக்குவரத்துக்கு பாதைகள் இன்று முதல் சனிக்கிழமை வரை மூடப்பட்டுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜூலை 12 செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் ஜூலை 16 சனிக்கிழமை காலை 5.30 மணிவரை இடதுபுற பாதைகள் மூடப்படும் என்று நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வாகன ஓட்டிகள் கவனமாகவும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்தும் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் அவ்வபோது அபுதாபியில் உள்ள அல் மக்தா பாலத்தின் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு, அக்டோபர் 2022 வரை தொடரும் என்று ITC அறிவித்தது.
பாலத்தின் இருபுறமும் பராமரிப்பு மற்றும் கட்டுமானத் திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தின் இருபுறமும் நடைபாதைகளை பராமரித்தல், கட்டமைப்புக்கு பயிண்ட் அடித்தல், பாலத்தின் கீழ் அத்தியாவசிய பாகங்களான கான்கிரீட்டை பராமரித்தல் ஆகியவை இந்த சீரமைப்பு திட்டத்தில் அடங்கும். பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பாலத்தை முந்திச் செல்வதைத் தவிர்க்கவும், பாலத்தின் கட்டுமானப் பணிகளைச் செயல்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும் நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.