ADVERTISEMENT

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவரும் அவரது 6 வயது மகனும் ஓமன் கடற்கரையில் மூழ்கி பரிதாபமாக பலி..!

Published: 14 Jul 2022, 4:30 AM |
Updated: 14 Jul 2022, 8:02 AM |
Posted By: admin

இந்தியாவின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவர் ஓமன் கடற்கரையில் நீரில் மூழ்கி இறந்துள்ளார். துபாயில் வசிக்கும் ஷஷிகாந்த், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஸ்ரேயா (9), ஸ்ரேயாஸ் (6) ஆகியோர் அண்டை நாடான ஓமனுக்குச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்தான முதற்கட்ட தகவலின்படி, ஸ்ரேயா மற்றும் ஸ்ரேயாஸ் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலத்த அலையால் அடித்துச் செல்லப்பட்டனர், அப்போது அவர்களை காப்பாற்ற முயன்ற சஷிகாந்த் நீரில் மூழ்கி இறதுவிட்டார். சிசிகாந்த் மற்றும் அவரது மகனின் உடல்கள் மட்டும் தற்போது கிடைத்துள்ளதாகவும், சிறுமி ஸ்ரேயாவை தேடும் பணி நடைபெற்று வருகிறதாகவும் சஷிகாந்தின் சகோதரர் கூறினார்.

மேலும், தொலைந்து போன சிறுமியை தேடும் பணி நடைபெற்று வருவதாக ராயல் ஓமன் காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT