ADVERTISEMENT

அமீரகத்தில் வசிக்கும் இந்திய பெண்ணுக்கு கிடைத்த கனடாவின் மதிப்புமிக்க ஸ்காலர்ஷிப்..!

Published: 4 Jul 2022, 10:03 PM |
Updated: 4 Jul 2022, 10:03 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கனட நாட்டின் மதிப்புமிக்க ஸ்காலர்ஷிப்பை பெற்று அசத்தியுள்ளார். அபுதாபியில் உள்ள GEMS United Indian School-இன் முன்னாள் மாணவியான கேன்டேஸ் சாரா சிஜூ என்பவர் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகம் வழங்கும் ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்பை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கனட நாட்டின் உயர்ந்த ஸ்காலர்ஷிப்பான இது, நான்கு வருட காலத்திற்கு கல்விக் கட்டணம், குடியிருப்பு செலவுகள், உணவு, புத்தகங்கள், காப்பீடு, சுய செலவுகள் போன்றவற்ற முழுமையாக உள்ளடக்கியதாகும்.

கோடிக்கணக்கான பணத்தை பெற்றுள்ள கேன்டேஸ் கூறுகையில், கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காலர்ஷிப்புக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ADVERTISEMENT