ADVERTISEMENT

துபாயில் நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்திய இந்தியர்..!

Published: 4 Jul 2022, 7:56 AM |
Updated: 4 Jul 2022, 7:56 AM |
Posted By: admin

துபாயில் சமீபத்தில் நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்தியுள்ளார். இந்த 83வது மஹ்சூஸ் டிராவில் 1000-க்கும் அதிகமான வெற்றியாளர்கள் பரிசுத் தொகையை பிரித்துக்கொண்டனர். மேலும் இந்த டிராவில் மூன்று பேர் 3,00,000 திர்ஹம்ஸை பிரித்துக் கொண்டனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த அனீஷ் என்பவரும் கனடாவைச் சேர்ந்த தாரேக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ராஜாவும் தலா 1,00,000 திர்ஹம்ஸை பெற்றனர்.

ADVERTISEMENT

இந்த மஹ்சூஸ் டிரா போட்டியில் பங்கேற்க www.mahzooz.ae என்ற இணையதளம் வழியாகப் பதிவுசெய்து, 35 திர்ஹம்ஸுக்கு தண்ணீர் பாட்டிலை பெற்று பங்கேற்கலாம். இதில் முதல் பரிசு 10,000,000 திர்ஹம்ஸ், இரண்டாம் பரிசு 10,00,000 திர்ஹம்ஸ் மற்றும் மூன்றாம் பரிசு 350 திர்ஹம்ஸ் என அனைத்து வாரமும் வழங்கப்படுகிறது.