ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்த கனமழையால் நிரம்பி வழியும் அணைகள்.. பாதிப்புகளை தவிர்க்க அதிகாரிகள் தீவிரம்..!

Published: 28 Jul 2022, 6:40 PM |
Updated: 28 Jul 2022, 6:40 PM |
Posted By: admin

அமீரகத்தில் நேற்று பெய்த கனமழையால் ராஸ் அல் கைமாவில் உள்ள அணை நிரம்பி வழிந்து வருகிறது. இதுகுறித்து புயல் மையத்தின் ட்வீட்டர் பதிவில், அமீரகத்தில் பல பகுதிகளில் மழைத் தண்ணீரால் சூழப்பட்ட நீரோட்டத்தின் விடியோக்களை வெளியிட்டது. மேலும் ராஸ் அல் கைமாவின் வடக்கில் அமைந்துள்ள வாடி கலிலா அணையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏனைய பாதிப்புகளை தவிர்க்க தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NCEMA) ஒருங்கிணைந்து தொடர்புடைய போலீஸ் குழுக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT