அமீரகத்தில் உள்ள விமான நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ், ஃபிளை துபாய், ஏர் அரேபியா மற்றும் Wizz Air அபுதாபி என அமீரகத்தின் விமான நிறுவனங்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைகளுக்கு அமர்த்தி வருகிறது.
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணியாளர்களாக கேபின் க்ரூ, விற்பனை முகவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், விமான நிலைய சேவை முகவர்கள் என 100-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் dnata, Emirates Holidays நிறுவனங்களுக்கும், மூத்த நிர்வாகிகள், பயண ஆலோசகர், மூத்த மேலாளர், தொழில்நுட்ப மேலாளர் போன்ற பணிகளுக்கும் இண்டெர்வியு நடைபெற்று வருகிறது.
மேலும் அபுதாபியின் எதிஹாட் விமான நிறுவனத்தில் கேபின் க்ரூ, உணவு பாதுகாப்பு தணிக்கை அதிகாரி, நெட்வொர்க் மேம்பாட்டு மேலாளர், ஏர்சைட் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பழுதுபார்க்கும் அதிகாரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேலைகளுக்கின் கீழ் பணியாளர்களை அமர்த்த உள்ளது.
விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.