ADVERTISEMENT

UAE: வாட்ஸ் அப்பில் துபாய் விமான நிலையத்தின் புதிய வாடிக்கையாளர் தொடர்பு மையம் தொடங்க முடிவு..!

Published: 21 Jul 2022, 11:02 AM |
Updated: 21 Jul 2022, 11:02 AM |
Posted By: admin

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாகப் பயணிக்கும் பயணிகள், வாடிக்கையாளர் பராமரிப்பு  தொடர்பு மையத்தை ஆன்லைன் மூலம் அணுகலாம். உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான DXB அதன் பயணிகளுக்கு, வாடிக்கையாளர் சேவை மையத்தை எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும், தங்களுக்கு விருப்பமான தேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

DXB-யில் இந்த சேவைக்கான சோதனை இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது 24/7 இருமொழி ஆதரவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவலைப் பெற்றுள்ளது, மேலும் வாட்ஸ்அப் chat சேவையைத் தொடங்குவதற்கான திட்டங்களும் இருப்பதாக DXB தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி எமிரேட்ஸ், dnata மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), துபாய் சுங்கம் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட துபாய் விமான நிலைய பங்குதாரர்களுக்கு தானியங்கி தொடர்பு மையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

“புதிய தொடர்பு மையம், தொலைபேசி, மின்னஞ்சல், live chat, DXB-யின் சமூக ஊடகங்கள், துபாய் விமான நிலையங்களின் இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் பயணிகள் ஆதரவை அணுகுவதற்கான நேரடி தொழில்நுட்பம் அமைக்க சேவைகளை ஒருங்கிணைத்து விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது” என்று துபாய் விமான நிலையம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் கூறுகையில், “புதிய DXB தொடர்பு மையம், துபாய் விமான நிலையங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர் டச்பாயிண்டிலும் விருந்தினர் அனுபவத்தை கணிசமான மேம்பாடுகளைச் செய்ய உள்ளது. ஒருங்கிணைந்த வணிக சேவைகளின் முன்னணி வழங்குநரான Teleperformance உடன் இணைந்து ஒருங்கிணைந்த சேவை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. DXB-யின் வாடிக்கையாளர் சேவை சிறப்பான முதலீடு புதுமையான மற்றும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் சேவை வழங்கப்பட்ட உள்ளது” என்று அவர் கூறினார்.

தொடர்பு மையத்தைத் தொடர்புகொள்வதற்கான சில வழிகள்:

  • 04-224 5555
  • customer.care@dubaiairports.ae என்ற ஈமெயில்
  • துபாய் விமான நிலையங்கள் மற்றும் DXB மற்றும் பல இணையதளங்களின் webchat
  • @DXB Facebook, Instagram மற்றும் Twitter
  • @DubaiAirports Facebook, Instagram மற்றும் Twitter
  • வரவிருக்கும் WhatsApp எண் 04-224 5555