துபாயில் 5 புதிய டாக்ஸி சேவைகள் இயக்க உரிமம் பெற்றுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். RTA-வின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியைச் சேர்ந்த அடெல் ஷாக்ரி கூறுகையில், ஊபெர் மற்றும் கரீம் வழங்குவதைப் போன்ற சேவைகளை புதிய நிறுவனங்கள் வழங்கும். டாக்ஸி போக்குவரத்துத் துறையில் பல ஸ்டார்ட் அப்களுக்கு உரிமம் வழங்குவதற்கான காரணம், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவினர்களுக்காக டாக்ஸி தேவை அதிகரிப்பதற்கு வழிவகையாக உள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் துபாயில் டாக்ஸி சேவைகளுக்கான ஹலா எலக்ட்ரானிக் சிஸ்டம் மூலம் முன்பதிவு செய்தவர்களின் சதவீதம் 5%-லிருந்து 33% ஆக உயர்ந்துள்ளது. துபாயில் டாக்ஸி தேவையில் அதிக சதவீதத்தை பதிவு செய்த 5 பிராந்தியங்கள் தேரா, பிசினஸ் பே, அல் பர்ஷா, அல் ரஃபா மற்றும் ஜுமேரா ஆகியவைகள் உள்ளன. மின்னணு முன்பதிவு முறையின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டாக்ஸிக்கான காத்திருப்பு நேரம் 2018 முதல் கடந்த ஆண்டு இறுதி வரை 11.3 நிமிடங்களிலிருந்து 3.3 நிமிடங்களாக 70% வரை குறைந்துள்ளதாக அறிக்கை மூலம் அறியப்படுகிறது.