ADVERTISEMENT

UAE: உலக நாடுகளை வாய் பிளக்க வைக்கும் துபாய்.. ஓட்டுநர் இல்லாத வாகனங்களில் மேப்பிங் வசதிகள்.. அடுத்தாண்டு அறிமுகப்படுத்த முடிவு..!

Published: 25 Jul 2022, 5:41 PM |
Updated: 25 Jul 2022, 7:27 PM |
Posted By: admin

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) குரூஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாகனங்களில் டிஜிட்டல் மேப்பிங் முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. இது 2023ஆம் ஆண்டிற்குள் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஒரு அடிப்படை திட்டமாகும். ஓட்டுநர் இன்றி வாகனங்களை வணிக ரீதியில் இயக்கும் குரூஸ் நிறுவனத்தின் முதல் நகரமாக துபாய் உள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மேட்டர் அல் தயர், குரூஸின் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கான செயல்பாட்டில் டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேப்பிங் வசதிகளுக்காக LiDAR, கேமரா மற்றும் சென்சார்களுடன் கூடிய சிறப்பு வாகனங்கள் பயன்படுத்ததப்பட உள்ளது. “2023ஆம் ஆண்டு இந்த வாகனங்கள் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்படும் என்றும் 2030ஆம் ஆண்டிற்குள் ஓட்டுநர் இல்லாத 4,000 வாகனங்களை நகரம் முழுவதும் இயக்க திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறினார்.