ADVERTISEMENT

UAE: உலகின் மிகவும் பிரபலமான பயண இடமாக திகழும் துபாய்… ஆய்வில் தகவல்..!

Published: 19 Jul 2022, 8:27 PM |
Updated: 19 Jul 2022, 8:27 PM |
Posted By: admin

உலகின் மிகவும் பிரபலமான பயண இடமாக துபாய் முதல் இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பவுன்ஸ் நிறுவனம் வெளியிட்ட TikTok Travel Index 2022 இன் படி, ‘துபாய்என்ற ஹேஷ்டேக்கைக் கொண்ட வீடியோக்களை 81.8 பில்லியன் பார்வையாளர்கள் சமூகவலைதளத்தில் பார்த்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த துபாய், தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் பார்வையாளர்கள் விரும்பும் நகரமாக துபாய் திகழ்கிறது. இந்த அதிநவீன நகரம் உலகின் மிகவும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைகளில் தாயகமாக உள்ளது என்று usebounce.com இணையதளம் கூறியுள்ளது.

“அமீரகம் கடந்த ஆண்டு 7.28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பெற்று 32 சதவீதத்தை அதிகரித்துள்ளது. துபாயின் சுற்றுலா மற்றும் பயணத் துறைகள் கோவிட்-19க்குப் பிறகு வலுவாக மீண்டுள்ளது. துபாய் 2021 ஆம் ஆண்டில் உலகளவில் சுற்றுலாத் துறையில் அதிக அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது, 30 திட்டங்களில் 6.4 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து 5,545 வேலைகளை உருவாக்கியது” என்று பவுன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் TIKTOK-இல் 140 நகரங்கள் அடுத்தது அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி TIKTOK-இல் 8.6 பில்லியன் பார்வையாளர்களுடன் 22வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடத்தில் உள்ள நியூயார்க் நகரம் 59.5 பில்லியன்பார்வையாளர்களை ஈர்த்ததுள்ளது.
  • மூன்றாவது இடத்தில் உள்ள லண்டன் டிக்டோக்கில் 36.8 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதன் பிறகு TIKTOK இல் அதிகம் பார்க்கப்பட்ட இடங்கள் இஸ்தான்புல் (34.0 பில்லியன்), பாரிஸ் (33.0 பில்லியன்), மியாமி (24.6 பில்லியன்), லாஸ் ஏஞ்சல்ஸ் (20.8 பில்லியன்), சிகாகோ (17.9 பில்லியன்), டொராண்டோ (17.1 பில்லியன்) மற்றும் மாட்ரிட் (16.0 பில்லியன்) ஆகும்.