ADVERTISEMENT

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை தேடுவோருக்கு நற்செய்தி..!

Published: 27 Jul 2022, 6:08 PM |
Updated: 27 Jul 2022, 6:08 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு கூப்பர் ஃபிட்ச் என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு அறிக்கைக்காக வெளியிடப்பட்ட வளைகுடா வேலைவாய்ப்பு குறியீட்டின் படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்புகள் 10 சதவீதம் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ரியல் எஸ்டேட், முதலீடு மற்றும் வங்கி ஆகிய துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவகியுள்ளதாக கூப்பர் ஃபிட்ச் நிறுவனம் கூறியுள்ளது. பொதுத் துறையில் வேலை வாய்ப்புகள், வளைகுடா நாடுகள் முழுவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. அபுதாபி, ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் பணி  அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் குவைத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளன. மேலும் அதன் துறைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

முதலீடு – 17%
ரியல் எஸ்டேட் – 14%
வங்கி – 14%
சட்டத்துறை – 13%
பொதுத்துறை – 8%
உற்பத்தி – 8%
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் – 7%
டிஜிட்டல் & டேட்டா – 6%
நிதித்துறை – 6%
சைபர் பாதுகாப்பு – 4%
கன்சல்டண்ட்- 4%
மென்பொருள் மேம்பாடு – 2%
உள்நாட்டு சட்டத்துறை – 2%

ஒரு வேலையைத் தேடும் போது வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு முன், முயற்சியைச் செய்வது முக்கியம். உங்கள் ஆஃபர் லெட்டரைப் பெற்றவுடன், ஒப்பந்தப்படிவத்தில் அனைத்து அடிப்படை விவரங்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் போது உங்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் இவைகள் அனைத்தும் அமீரக தொழிலாளர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை ஆகும்.

ADVERTISEMENT