ADVERTISEMENT

அமீரகத்தில் கனமழை.. பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் REMOTE WORK செய்ய அனுமதி..!

Published: 28 Jul 2022, 8:26 AM |
Updated: 28 Jul 2022, 8:26 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரிமோட்work செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக, அமீரகத்தின் அமைச்சரவை அனைத்து மத்திய துறைகளுக்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியது, அதே நேரத்தில் மனித வளங்கள் மற்றும் அமைச்சகம் (MOHRE) தனியார் துறை நிறுவனங்களுக்கும் அதே அறிவிப்பை வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஊழியர்கள், தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கும் பணியிடங்களுக்கும் இடையில் பயணம் செய்யும் நேரத்தை வேலை நேரத்துடன் கணக்கிட வேண்டும் என்று நிறுவனத்திற்கு அமைச்சகம் வலியுறுத்தியது. அமீரகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகியவை குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.