ADVERTISEMENT

அமீரகத்தில் கட்டிடத்துறை முதலாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?

Published: 25 Jul 2022, 8:29 PM |
Updated: 25 Jul 2022, 8:29 PM |
Posted By: admin

அமீரகக்தில் கட்டுமான தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்புத் தேவைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அபுதாபி முனிசிபாலிட்டி நடத்திய விழிப்புணர்வு நிகழ்வில், ​​பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் உயரமான கட்டிடங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு விளக்கினர். பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றுவதும், எப்போதும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதும் முக்கியம் என்று வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

மேலும் தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க நகராட்சி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் வலியுறுத்தினர். கடந்த ஆண்டுகளில் கட்டுமான தளத்தில் ​கட்டி முடிக்கப்படாத தளங்கள், தற்காலிக தளங்கள், பாதுகாப்பு உபகரணங்களின்றி கட்டுமானத்தில் இருக்கும் கோபுரங்களில் ஜன்னல்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் தொட்டில்களில் உயரத்தில் வேலை செய்வதை கட்டிட முனிசிபல் இன்ஸ்பெக்டர்கள் கண்டறிந்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தொழில்சார் ஆபத்துகள், காயங்கள் மற்றும் நோய்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க தேவையான வழிகளை வழங்குவது முதலாளியின் பொறுப்பாகும். கட்டுமான தளங்களில் விழிப்புணர்வு விவரங்களுடன் அறிவுறுத்தல் பலகைகள் இருக்க வேண்டும். அபாயங்களைத் தவிர்ப்பதற்கு முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும், பாதுகாப்பை உறுதிப்படுத்த அவ்வப்போது மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் ஆபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலாளியின் அனைத்து அறிவுறுத்தல்களுக்கும் இணங்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்த அறிவுறுத்தல்களுக்கு முரணான செயல்களை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும், தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பான உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு குற்றத்தைப் பொறுத்து 10,000 முதல் 40,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டுமான தளங்கள் மூடப்படவும் வாய்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்