துபாயில் வசிக்கும் இந்தியரான ரெஹோபோத் டேனியல் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லியனர்ஸ் டிராவில் வெற்றிபெற்றுள்ளார். துபாய்சர்வதேச விமான நிலையத்தின் கான்கோர்ஸ் டெர்மினல் 3இல் உள்ள மில்லினியம் மில்லியனர் சீரிஸ் டிராவில் டேனியல் 1 மில்லியன்டாலரை பெற்று அசத்தியுள்ளார்.
63 வயதான டேனியல், துபாயில் புத்தகக் கடை வியாபாரம் செய்து வருகிறார், சுமார் 20 ஆண்டுகளாக மில்லினியம் மில்லியனர்டிராவில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த வெற்றி குறித்து தெரிவித்துள்ள டேனியல், அருமையான வாய்ப்புக்கு துபாய் டூட்டிஃப்ரீக்கு நன்றி. இந்த வெற்றி எனக்கு மிக பயனுள்ளதாக அமையும். மேலும் வெற்றி பெற்ற பலருக்கு இது உதவியாக உள்ளது, எனவேஇந்த நீண்ட காலம் இந்த மில்லினியம் டிரா தொடர பிரார்த்திக்கிறேன்” என்றார்.