ADVERTISEMENT

UAE: அமீரக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு..!

Published: 23 Jul 2022, 1:11 PM |
Updated: 23 Jul 2022, 1:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாத தொடக்கத்தில் வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல்-ஜர்வான் இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு ஜூலை 30 அன்று இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். அதன்படி அமீரகத்தின் அதிகாரப்பூர்வ பொது விடுமுறையானது, குடியிருப்பாளர்களுக்கு ஜூலை 30 அன்று இருப்பதாகவும் கூறினார். வார இறுதி நாட்களைக் கடைப்பிடிக்கும் பலருக்கு, ஜூலை 30 அன்று சனிக்கிழமையாக இருப்பதால், மேலும் ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது.

ADVERTISEMENT

இதனை அடுத்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளுக்காக அடுத்த பொது விடுமுறை அக்டோபர் 8 ஆம் தேதி வருகிறது. மேலும் அக்டோபர் 8ஆம் தேதி சனிக்கிழமை என்பதால், சில குடியிருப்பாளர்கள் மட்டுமே கூடுதல் விடுமுறையை அனுபவிக்க முடியும். அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ நீண்ட வார இறுதி விடுமுறை உள்ளது. அது நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி அமீரகத்தில் தேசிய தினத்தின் விடுமுறையாக உள்ளது.