ADVERTISEMENT

அமீரகத்தில் பொது துறைக்கு இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு…!

Published: 26 Jul 2022, 5:48 PM |
Updated: 26 Jul 2022, 5:48 PM |
Posted By: admin

அமீரகம்: வரவிருக்கும் சனிக்கிழமை, ஜூலை 30 அன்று இஸ்லாமிய புத்தாண்டான 1444 ஹிஜ்ரி வருட பிறப்பு என்பதால் அமீரகத்தின் தனியார் நிறுவனக் ஊழியர்கள் போன்று அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வ ஊதிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் துறைகளின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களை ஒருங்கிணைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை வழங்கிய ஆணையின்படி விடுமுறைகள் வழங்கப்படுவதாக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கிரிகோரியன் புத்தாண்டு போல் இல்லாமல், இஸ்லாமிய புத்தாண்டு பிறை அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி முஹர்ரம் இஸ்லாமிய மாதத்தின் முதல் மாதம். முன்னதாக இம்மாத தொடக்கத்தில், வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான், ஹிஜ்ரி புத்தாண்டு இந்த ஆண்டு ஜூலை 30 அன்று வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அடுத்த அதிகாரப்பூர்வ விடுமுறையும் அக்டோபர் 8 அன்று வருகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை குறிக்கும் வகையில் டிசம்பர் 1, 2 மற்றும் 3 நாட்கள் விடுமுறையாக இருக்கும், டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறையை குடியிருப்பாளர்கள் கொண்டாட வாய்ப்புண்டு.

ADVERTISEMENT