ADVERTISEMENT

அபுதாபியில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. கட்டுக்குள் கொண்டுவந்த பாதுகாப்பு படையினர்..!

Published: 11 Jul 2022, 1:53 PM |
Updated: 11 Jul 2022, 1:53 PM |
Posted By: admin

அபுதாபியில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அல் மஃப்ராக் பகுதியில் நேற்று மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தில் எரிந்த கிடங்கின் படங்களை அபுதாபி காவல்துறை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புக் குழுக்கள் விரைந்து வந்து தீயை வெற்றிகரமாக அணைத்து அப்பகுதியை பாதுகாப்புப்படுத்தினர்.  இந்நிலையில் தற்போது கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது.  தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.