ADVERTISEMENT

அமீரகத்தில் நள்ளிரவு பெய்த மழை.. மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீச இருப்பதாக NCM தகவல்..!

Published: 26 Jul 2022, 8:06 AM |
Updated: 26 Jul 2022, 8:06 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், நள்ளிரவு நாட்டின் பல இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மழை பெய்துள்ளது. ஷார்ஜாவின் கோர்ஃபக்கான், அல் ரஃபிசா அணை, திப்பா அல் ஹிஸ்ன் பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.  இது குறித்து தேசியவானிலை ஆய்வு மையம், நாட்டின் சில பகுதிகளில் புழுதி வீசக்கூடும் என்றும் வானிலை அபாயகரமானதாக இருக்கும் என்றும்கூறியுள்ளது. மேலும் மழையுடன் தொடர்புடைய சில கிழக்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்புகள்உள்ளதாகவும், புதிய காற்று மணிக்கு 45 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும்வேக வரம்புகளை கடைப்பிடிக்கவும் அபுதாபி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.