ADVERTISEMENT

அமீரகத்தில் நடைபெற்ற அழகி போட்டியில் Mrs. Elegant பட்டத்தை தட்டிச்சென்ற தமிழக பெண்..!

Published: 7 Jul 2022, 8:00 PM |
Updated: 7 Jul 2022, 8:00 PM |
Posted By: admin

துபாயில் நடைபெற்ற சர்வதேச Mrs அமீரகம் 2022 போட்டியில் பஹ்ரைனில் வசிக்கும் மதுரை பெண் ஜனனி ஷங்கர் Mrs. Elegant பட்டம் வென்றுள்ளளார். மதுரையை சேர்ந்த இவர் தற்போது முன்னணி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் பஹ்ரைனில் வசித்து வருகிறார்.

ADVERTISEMENT

இதன் மூலம் சர்வதேச அழகி போட்டியில் பஹ்ரைனில் இருந்து வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெறுகிறார் மதுரை பெண் ஜனனி ஷங்கர். வெற்றி மேடையிலேயே தமிழகத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

முன்னதாக இவர் நடித்த குறும்படங்கள் இந்திய அளவில் விருதுகளை பெற்றுள்ளது. வெற்றி பெற்று திரும்பியவருக்கு விமான நிலையத்தில் பஹ்ரைனில், அவர் கதாநாயகியாக நடிக்கும் ‘மித்ரா’ திரைப்பட குழுவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT