அபுதாபியின் மினா சயீத் பகுதியில் ஒரு தனித்துமிக்க ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட மீன் மார்க்கெட் நேற்று திறக்கப்பட்ட்து. இந்த மீன் மார்க்கெட்டில் 8 உணவகங்கள் மற்றும் 44 மீன் சுத்தம் செய்யும் நிலையங்கள் மற்றும் வணிக இடங்கள் உள்ளன. மேலும் கூடுதலாக, 104 புதிய மீன் கடைகள் எட்டு உலர் மீன் 4 பழங்கள் மற்றும் காய்கறி கடைகள் மற்றும் மூன்று வணிக கூடங்களும் உள்ளன.
நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT), சமூக சந்தைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த சர்வதேச தரங்களை இந்த மார்க்கெட் பின்பற்றுகிறது, கடை உரிமையாளர்களுக்கு சிறந்த சேவைகள் மற்றும் வசதிகளை வழங்குகிறது. புதிய மார்க்கெட்டானது அபுதாபியின் மீன்பிடி வர்த்தகத்தின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய கருப்பொருள்களை உள்ளடக்கிய வடிவமைப்புடன் தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.