ADVERTISEMENT

UAE: இனி துபாயில் இருந்து திருச்சிக்கு மிக குறைந்த விலையில் பயணிக்கலாம்.. அதிரடி ஆஃபரை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

Published: 23 Jul 2022, 5:24 PM |
Updated: 23 Jul 2022, 5:24 PM |
Posted By: admin

திருச்சி விமான நிலையத்தில் இருந்து அமீரகத்தின் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். துபாயில் இருந்து திருச்சி மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலையில் விமானங்களை இயக்கவுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளதாவது, வாரத்திற்கு 10 விமானங்கள் துபாயில் இருந்து திருச்சிக்கு 530 திர்ஹம்ஸில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் துபாயில் இருந்து மும்பை, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், மங்களூரு, அம்ரிஸ்டர், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களுக்கு குறைந்த டிக்கெட் விலையில் விமானங்களை இயக்கவுள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.