துபாயின் Al Quoz 2, Nad Al Sheba 2 and Al Barsha South 3 ஆகிய மூன்று குடியிருப்பு பகுதிகளில் 34.4 கிமீ நீளமுள்ள உள் சாலைகளின் கட்டுமானத்தில் 60-70 சதவீதம் நிறைவடைந்ள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
“குடியிருப்புப் பகுதிகளில் உள் சாலைகள் அமைப்பது என்பது ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துணைத் தலைவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர், துபாய் ஆட்சியாளர் மற்றும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் அவர்களின் உத்தரவுகளின் வெளிப்பாடாகும். மக்கள்தொகை மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தின் தேவைகளைச் சமாளிக்கவும், அமீரகத்தில் உள்ள மக்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதன் அவசியத்தால் இத்தகைய திட்டம் மேற்கொள்ளப்படுவதாக RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் அல் தயர் கூறினார்.
அல் கூஸ் 2 அல் கைல் சாலைக்கும் மெய்தான் சாலைக்கும் இடையில் அமைந்துள்ள அல் கூஸ் 2 இல் சுமார் 70% சாலை, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் அல் கைல் சாலை போன்ற சுற்றியுள்ள சாலைகளுடன் வளர்ச்சியில் உள்ள குடியிருப்பு பகுதியுடனான இணைப்பை மேம்படுத்தும் என்று அல் தயர் விளக்கினார்.
அல் பர்ஷா தெற்கு 3 இல் 6.4 கிமீ நீளமுள்ள உள் சாலைகளின் நிறைவு விகிதம் 65% ஐ எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் வடக்கே அல் பர்ஷா தெற்கு 2, தெற்கில் அல் ஹெபியா 1 மற்றும் 4 (மோட்டார் மற்று ஸ்போர்ட்ஸ் சிட்டி), கிழக்கில் அர்ஜன் மற்றும் அல் பர்ஷா தெற்கு 4 ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது உம் சுக்கிம் மற்றும் அல் பர்ஷா சவுத் 2 இன் சாலை இணைப்புக்கு செல்வதை எளிதாக்குகிறது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அல் பர்ஷா 1 மற்றும் 2 ஐ உள்ளடக்கும் வகையில் அதன் சாஃப்ட் மொபிலிட்டி திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்க உள்ளது, அடுத்த மூன்றாம் காலாண்டில் திட்டம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.