ADVERTISEMENT

UAE: விமான நிலையத்திற்கு வந்த துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது.. வியந்துபோன குடும்பத்தினர்..!

Published: 22 Jul 2022, 8:12 AM |
Updated: 22 Jul 2022, 8:12 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும்போது குடியிருப்பாளர்கள் ஒரு புத்தகத்தில் அவரது ஆட்டோகிராஃபையும் பெற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB)-யில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கிருந்த மக்கள் அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்று வியப்படைந்தனர். துபாய் ஆட்சியாளர் பொது இடங்களுக்குச் செல்லும்போது குடியிருப்பாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் EXPO 2020 வருகை தந்தபோது குழந்தைகளுடன் உரையாடினார்.

2020 ஆம் ஆண்டில், அவர் மாலை நேரத்தில்  சைக்கிள் பயணம் செய்வதையும், சாலையோரத்தில் பிரார்த்தனை செய்வதும் சமூக வகைதளத்தில் வைரலானது. அது மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டில், அவர் அதிகாரிகளுடன் ஒரு காரில் பயணித்து தேராவில் உள்ள கோல்ட் சூக்-ஐ பார்வையிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT