ADVERTISEMENT

UAE: ஷார்ஜா, ஃபுஜைரா இடையே மீண்டும் தொடங்கிய போக்குவரத்து சேவை..!!

Published: 30 Jul 2022, 5:04 PM |
Updated: 30 Jul 2022, 5:05 PM |
Posted By: admin

அமீரகத்தில் ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா இடையே நிறுத்தம் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து சேவையானது தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது. ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெள்ளம் காரணமாக ஜூலை 28 முதல் போக்குவரத்து சேவையை நிறுத்திய பின்னர் ஃபுஜைரா சிட்டி சென்டருக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், கல்பா மற்றும் கோர்பக்கனுக்கான பேருந்துகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் தண்ணீர் அடைப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்த வானிலை மற்றும் அதன் விளைவாக கோர்பக்கான் சாலை அருகே உள்ள தஃப்தா பகுதியில் நடைபெற்று வரும் அவசர பணி காரணமாக வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவும், தேவைப்பட்டால் மட்டுமே சாலையைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT