ADVERTISEMENT

UAE கனமழை: ஃபுஜைராவிற்கு செல்லும் போக்குவரத்து சேவையை நிறுத்திய ஷார்ஜா..!!

Published: 28 Jul 2022, 5:39 PM |
Updated: 28 Jul 2022, 5:41 PM |
Posted By: admin

ஷார்ஜாவின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், கனமழை காரணமாக கிழக்கு பகுதிகளுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையை வியாழக்கிழமை (இன்று) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதனடிப்படையில் ஃபுஜைரா வழியாக கொர்ஃபக்கான் மற்றும் கல்பாவை நோக்கிய இரண்டு வழித்தடங்களில் போக்குவரத்து ஆணையம் சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள இரண்டு வழித்தடங்கள் – லைன் 116 (ஷார்ஜா-ஃபுஜைரா-கொர்ஃபக்கான்) மற்றும் லைன் 611 (ஷார்ஜா-ஃபுஜைரா-கல்பா) ஆகியவை ஆகும். இந்த வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகள் மாற்றுவழிக்காக அல் தைத் சிட்டிக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், சீரற்ற காலநிலை காரணமாகவும் மூடப்பட்டுள்ளது.

வானிலை காரணமாகவும் அவசர வேலை காரணமாகவும் தஃப்தா அருகே உள்ள கோர்பக்கன் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும், தேவைப்பட்டால் மட்டுமே சாலையைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஃபுஜைராவிற்கு பொது பேருந்து பயணங்களை நிறுத்தியது.

ADVERTISEMENT

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஃபுஜைரா நோக்கி பயணிகளை மிகவும் கவனமாக இருக்குமாறு டாக்சிகளுக்கு RTA அறிவுறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள், கடைகள் சேதமடைந்து வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணியில் அமீரக காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.