ADVERTISEMENT

அமீரக வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு சேவைகளை தொடங்கும் SIB வங்கி..!

Published: 5 Jul 2022, 8:35 PM |
Updated: 5 Jul 2022, 8:35 PM |
Posted By: admin

SOUTH INDIAN BANK LIMITED (SIB) விரைவில் வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்களுக்காக சிறப்பு சேவைகளை தொடங்கும் என்று வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி துபாயில் தெரிவித்தார். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், வாடிக்கையாளார்களின் தேவையை மையமாகக் கொண்டு செயல்படும் என தெரிவித்தார் தனியார் துறை வங்கியின் நிர்வாக இயக்குனரான முரளி ராமகிருஷ்ணன்.

ADVERTISEMENT

அவர் மேலும் கூறுகையில், “தற்போது NRI வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு, வீடு மற்றும் வாகனக் கடன்களைப் பெறுவதற்கும், நிதிகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதற்குமான சேவைகளை வழங்குகிறோம் என கூறினார். SIB வங்கியின் பிரதிநிதி அலுவலகம் 2018 முதல் பர்துபாயில் உள்ள பேங்க் சாலையில் இயங்கி வருகிறது. NRI வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள NRE வங்கி சேவைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய அனைத்து தகவல்களுக்கும் இந்த அலுவலகத்தை அணுகலாம் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

உக்ரைன் போரின் பொருளாதார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு.  வங்கி அதன் மூலோபாயத்தை மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஹடி எக்ஸ்பிரஸ் எக்ஸ்சேஞ்ச் உடன் SIB வங்கி ஒரு கூட்டணியைக் கொண்டுள்ளது. துபாயில் உள்ள அதன் பிரதிநிதி அலுவலகத்திற்கு கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் SIB தனது இருப்பை இந்த ஒப்பந்தம் கூடுதலாக வழங்குகிறது.

ADVERTISEMENT