ADVERTISEMENT

டெல்லியில் இருந்து துபாய்க்கு வந்துகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கம்..!

Published: 6 Jul 2022, 8:02 PM |
Updated: 6 Jul 2022, 8:02 PM |
Posted By: admin

டெல்லியில் இருந்து துபாய்க்கு வந்துகொண்டிருந்த SPICEJET விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய் சென்ற SPICEJET SG-11 விமானம் தொழில்நுட்பக் கோளறு காரணாமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இன்டிகேட்டர் லைட் செயல் இழந்ததால், கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது என SPICEJET விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், கராச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற SPICEJET விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் விமானம் அவசர அவசரமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.