ADVERTISEMENT

அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை இலவச பார்க்கிங் வசதி கிடையாது.. புதிய அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை..!

Published: 11 Jul 2022, 8:06 AM |
Updated: 11 Jul 2022, 8:06 AM |
Posted By: admin

அபுதாபியில் இனி ஞாயிற்றுக் கிழமைகளில் பார்க்கிங் கட்டணம் இலவசம் என்று போக்குவரத்து துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை 15 முதல் அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் மற்றும் டோல் கட்டணத்தைப் இலவசமாக பெற்றுகொள்ள குடியிருப்பாளர்களுக்கு அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த முடிவானது பீக் ஹவர்ஸின் போக்குவரத்தை மேம்படுத்தவும், அமீரக சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, துபாயில் நான்கரை நாட்கள் வேலையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பார்க்கிங் வசதியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் படி வார இறுதிக்கு ஏற்ப அபுதாபியில் மிதக்கும் பாலத்தின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. மேலும் நீல நிறத் தகவல் அடையாளங்களை கொண்ட மண்டலங்களைத் தவிர அனைத்து மண்டலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT