எமிரேட்ஸ் டிராவின் சமீபத்திய போட்டியில் 77,777 திர்ஹம்ஸை இந்தியர்களான ஸ்ரீஜித் கொச்சுப்புதாடத்து சுரேந்திரன்நாயர், ராஜேந்தர் புர்ரா மற்றும் கெல்வின் சன்னி வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.
வெற்றிபெற்றது குறித்து, 40 வயதான சிவில் இன்ஜினியர் நாயர் கூறுகையில், “நான் 77,777 திர்ஹம்ஸ் வென்றதைக் கண்டுவியப்படைந்தேன், குறிப்பாக நான் இதற்கு முன்பு சில முறை மட்டுமே டிராவில் பங்கேற்றுள்ளேன். வென்ற தொகையில் எங்கள் எட்டு வயது மகனின் கல்விக்காக பயன்படுத்துவோம்” என்றார்.
துபாயில் கணக்கியல் எழுத்தராக பணிபுரியும் 28 வயதான புர்ரா கூறுகையில் “இந்த வெற்றியின் மூலம் எனது குடும்பத்திற்கு ஒருவீட்டைக் கட்டப் போகிறேன், இதுதான் எனது பல நாள் ஆசையாகும். இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய எமிரேட்ஸ் டிராவிக்குநன்றி” என்றார்.
மேலும் 28 வயதான சன்னி என்பர் 77,777 திர்ஹம்ஸ் வென்றது குறித்து பேசுகையில் “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது கடனை அடைக்க எனது வெற்றியைப் பயன்படுத்தப் போகிறேன்.