ADVERTISEMENT

UAE: ஈத் அல் அதா விடுமுறை தினத்தில் 30 ஆயிரம் பேரா..? ஸ்தம்பித்த ஜெபல் ஜெய்ஸ் மலை..!

Published: 12 Jul 2022, 9:54 AM |
Updated: 12 Jul 2022, 9:55 AM |
Posted By: admin

ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஜெபல் ஜெய்ஸின் மலை சிகரத்தை பார்வையிட்டு ரசித்துள்ளனர். அதன் படி, முதல் இரண்டு நாட்களில் சுமார் 12,500 வாகனங்கள் ஜெபல் ஜெயிஸ் மலை உச்சத்திற்கு சென்றதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈத் அல் அதாவின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் 12,500 வாகனங்களில் 30,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு சென்றதாக கூறப்படுகிறது, மேலும் மூன்றாம் நாள் மற்றும் இறுதி ஈத் நாளான நேற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெபல் ஜெய்ஸின் 36 கிமீ நீளமுள்ள சாலையில் அல் புரைரத் மற்றும் வாடி கடாவிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலை சிகரம் வரை போக்குவரத்தை ஒழுங்கமைக்க போலீஸ் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.