ADVERTISEMENT

UAE: 24 நாளில் SPICEJET விமானத்தில் 9-வது முறை தொழில்நுட்பக் கோளாறு.. காரணம் என்ன..?

Published: 14 Jul 2022, 1:08 PM |
Updated: 14 Jul 2022, 1:08 PM |
Posted By: admin

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய்மதுரை SPICEJET விமானம் திங்கள்கிழமை தாமதமாக மதுரையை வந்தடைந்தது. SPICEJET நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில், கடந்த 24 நாள்களில் 9ஆவது முறையாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த கோளாறு காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு SPICEJET நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது மற்றொரு நிகழ்வும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து துபாய்க்கு SPICEJET நிறுவனத்தின் எஸ்ஜி 23 ரக விமானம் திங்கள்கிழமை சென்றடைந்தது. துபாய் விமான நிலையத்தை அடைந்ததும் அந்த விமானத்தின் சக்கரத்தை பொறியாளா் ஒருவா் பரிசோதித்தபோது, அது வழக்கத்துக்குமாறாக கூடுதல் அழுத்தத்துக்குள்ளாகி செயலிழந்ததைக் கண்டறிந்தாா்.

அந்த விமானம் துபாயில் இருந்து தமிழகத்தின் மதுரைக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், இந்தத் தொழில்நுட்பக் குறைபாடு கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து மும்பையிலிருந்து துபைக்கு மாற்று விமானத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பிவைத்தது. அந்த விமானம் பயணிகளுடன் மதுரை வந்தடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மதுரையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து அந்நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், துபாய் – மதுரை விமான சேவை தாமதமானது. உடனடியாக மாற்று விமானம் அனுப்பிவைக்கப்பட்டு பயணிகள் இந்தியா அழைத்துவரப்பட்டனா். காலதாமதம் என்பது அனைத்து விமான நிறுவனங்களிலும் ஏற்படக்கூடியது தான். விமானத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லைஎன்றாா்.

SPICEJET நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் கடந்த 24 நாள்களில் 9 முறை பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளைசந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT