ADVERTISEMENT

UAE: JEE தேர்வில் முதலிடம் பிடித்த துபாய் NRI மாணவர்..!

Published: 14 Jul 2022, 8:29 PM |
Updated: 14 Jul 2022, 8:29 PM |
Posted By: admin

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான IIT, IIIT, NIT போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு , இளநிலை தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு JEE எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். முதல்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க சுமார் 8.7 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், JEE முதல் நிலைத் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இதில், இந்தியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக மாணவர்கள் இந்தியாவில் நடத்தப்பட்ட பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வில் JEE 99.72 சதவீத மதிப்பெண் பெற்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும், JEE மூலம், விண்ணப்பதாரர்களுக்கு இந்தியாவில் உள்ள சில முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பளிக்கிறது.

99.72 சதவீதம் மதிப்பெண் பெற்ற ஆர்யன் முரளிதரன் துபாய் அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவராக உள்ளார். அவர்தான் சேர விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் உள்ள மிலேனியம் பள்ளியின் 17 வயது மாணவர், போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்காக ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கும் மேலாகப் படித்ததாகக் கூறினார். “நான் காலை 7 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை, சிறிய அளவில் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொண்டு படிப்பேன்என்று அவர் கூறினார்.