சுற்றுலாத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் துபாய் முதல் இடத்தில் உள்ளது. தி பைனான்சியல் டைம்ஸின் FDI சந்தைதரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் அமீரகத்தின் 30 வெவ்வேறு திட்டங்களில் 6.4 பில்லியன் திர்ஹம்ஸ்களை ஈர்த்ததுள்ளது. மேலும் திட்டங்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அமீரகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து, டிவிட்டரில் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், அமீரகம் அனைத்துத் துறைகளிலும் வணிகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தி வருகிறது. சுற்றுலாத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான முதல் இடமாக துபாய் உருவாகி வருவது அமீரகத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான மையமாகவும் வலுப்படுத்துகிறது என்றார்.
“முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் அதிக போட்டித் தன்மையுள்ள முதலீட்டுச் சூழலை வழங்குவதன் மூலம், துபாயின் நிலையை ஒருங்கிணைக்கும் எங்கள் முயற்சிகளைத் தொடருவோம். அமீரகத்தின் வலுவான உள்கட்டமைப்பு, வணிக நட்பு கொள்கைகள் மற்றும் நெகிழ்வான ஒழுங்குமுறை சூழல் ஆகியவை நகரத்தை உலகின் FDI இலக்குகளில் முன்னணியில் வைத்திருக்கும்” என்று துபாய் இளவரசர் கூறினார்.