ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் அமீரகம்.. அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவு..!

Published: 4 Jul 2022, 10:13 AM |
Updated: 4 Jul 2022, 10:42 AM |
Posted By: admin

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிப்புக்குள்ளான பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணத்தை ஐக்கிய அரபு அமீரகம் விமானங்கள் மூலம் அனுப்பி உதவி வருகிறது. அதில் மருத்துவ பொருட்கள் உட்பட அறுவை சிகிச்சை அறைகளையும் அமீரகம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சேதமடைந்த மருத்துவமனைகளை இயக்கவும், அவசர மருத்துவ சேவைகளை வழங்கவும் மருத்துவக் குழு ஒன்றை அமீரகம் அனுப்பியது. இந்நிலையில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரச மருத்துவ உதவிகள் வழங்கிட மாண்புமிகு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.