ADVERTISEMENT

UAE: நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்த அமீரகம்..!

Published: 22 Jul 2022, 8:12 PM |
Updated: 22 Jul 2022, 8:12 PM |
Posted By: admin

சமீபத்தில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்ட ன்விசா வழங்கி வரும் நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளது. அமீரகம் வழங்கும் கோல்டன் விசா அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த விசாவை பெறுபவர்களுக்கு அமீரக அரசு சலுகைகளையம் வழங்குகிறது. அந்த வகையில், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி தங்களுடைய பணிகளை மேற்கொள்ளவும் அனுமதிப்படுவர். குறிப்பாக இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள்.

5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விசாவை ஏற்கனவே பல பாலிவுட் பிரபலங்கள் பெற்றுள்ள நிலையில், சமீப காலமாக தமிழ் பிரபலங்களும் அடுத்தடுத்து பெற்று வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கோல்டன் விசா நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துளளது. எனவே கோல்டன் விசா பெறுவதில் பெருமைப்படுவதாகவும், இந்த விசாவை வழங்கியதற்கு தன்னுடைய நன்றிகளையும் ட்விட்டர் மூலம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT