எமிரேட்ஸ் டிராவில் பங்கேற்று வரும் அமீரக வாழ் இந்தியரான மனோஜ், சமீபத்தில் நடைபெற்ற 3 ரேஃபிள் டிராவில் இரண்டு முறை 77,777 திர்ஹம்ஸ் வென்றுள்ளார். வெற்றிபெற்ற செய்தியை அவருடைய நண்பர் ஒருவர் மனோஜுக்கு தெரிவித்ததை அடுத்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து எமிரேட்ஸ் டிராவில் பங்குபெற்று வரும் மனோஜுக்கு ஒரு முறைக்கூட அதிர்ஷ பரிசு தொகை கிடைத்ததில்லை. எனினும் சலைக்காமல் மீண்டும் மீண்டும் டிராவில் கலந்துகொண்டதில், தற்போது 3 ரேஃபிள் டிராவில் 77,777 பரிசைப் வென்று அசத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “எனது சொந்த நாட்டில் தேவையுள்ள மக்களுக்கும், தொண்டு நிறுவங்களுக்கும் இந்த பரிசுத் தொகையை வழங்கி ஆதரவளிக்க விருப்புகிறேன்” என்று தெரிவித்தார்.