ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் 11-வது மாடியில் இருந்து விழுந்த இந்தியர்.. சம்பவ இடத்திலேயே பலி..!

Published: 16 Jul 2022, 9:05 AM |
Updated: 16 Jul 2022, 9:05 AM |
Posted By: admin

ஷார்ஜாவின் அல் தவன் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து விழுந்த 46 வயதான இந்தியர் ஒருவர் உயிரிழதுவிட்டதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து ஷார்ஜா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிபோதையில் இருந்த நபர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ADVERTISEMENT

அந்த நபர் தனது குடும்பத்தினரிடம் தான் தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தற்கொலை மிரட்டல் குறித்து குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர், இருப்பினும் போலீசார் வருவதற்கு முன்பே அவர் குதித்து இறந்துவிட்டார்.

மேலும் அவர் தனது மகளுடன் சேர்ந்து தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இறந்த அவரது உடலை முதலில் அல் குவைத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டது.

ADVERTISEMENT