ADVERTISEMENT

UAE: ஈத் அல் அதா வாழ்த்துக்களை தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள்..!

Published: 9 Jul 2022, 9:36 AM |
Updated: 9 Jul 2022, 9:36 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஈத் அல் அதா வாழ்த்துக்களை குடிமக்கள் மற்றும் அமீரகத்தின்  குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ட்விட்டரில், “எனது சகோதரர்கள், அமீரக ஆட்சியாளர்கள், குடிமக்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஈத் அல் அதா வாழ்த்துக்கள். இறைவன் தொடர்ந்து நம் தேசத்தை ஆசீர்வதித்து, உலக மக்களுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் வழங்கட்டும்என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அமீரகத்தின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் அதா வாழ்த்துக்களை துணை அதிபரும், துபாய் ஆட்சியாளர்ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்  தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ஷேக் முகமது ட்விட்டரில், “அராஃபா தினமான இந்த பெருநாளில், அனைத்து யாத்ரீகர்களிடமிருந்தும் ஹஜ்ஜையும், நம் அனைவரிடமிருந்தும் நற்செயல்களையும் ஏற்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கேட்டுக்கொள்கிறோம். ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ஈத் அல் அதாவாக இருக்கு வாழ்த்துகிறோன், மேலும் உலக மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் ஆசைப்படுகிறேன்என்று பதிவிட்டுள்ளார்.