ADVERTISEMENT

UAE: துபாயில் 31 வருடங்களாக வாகனம் ஓட்டியதில் ஒரு போக்குவரத்து விதிமீறலில் கூட ஈடுபடாத காவலர்.. கெளரவித்த உயர் அதிகாரிகள்..!

Published: 12 Jul 2022, 8:51 AM |
Updated: 12 Jul 2022, 8:51 AM |
Posted By: admin

அமீரகத்தில் 1991 ஆம் ஆண்டு தனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றதிலிருந்து, துபாய் காவல்துறையைச் சேர்ந்த சேலம் மிசாத் அல் திபானி ஒரு போக்குவரத்து விதிமீறலில் கூட ஈடுபட்டதில்லை என்று பாதுகாப்பு மற்றும் அவசரநிலை பொதுத் துறையைச் சேர்ந்த அதிகாரி  தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதியான ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மரி, போக்குவரத்துச் சட்டங்களை சிறப்பாகக் கடைப்பிடித்ததற்காம மிசாத்துக்கு துபாய் போலீஸ் கமாண்டர்இன்சீஃப் எக்ஸலன்ஸ் விருதுகள் 2022 விழாவில்   ஐடியல் டிரைவர்விருதை வழங்கி கௌரவித்தார்.

அந்த அதிகாரி 1985 ஆம் ஆண்டு துபாய் காவல்துறையில் சேர்ந்தார். கடந்த 31 ஆண்டுகளாக அவர் ஒரு தூய்மையான ஓட்டுநர் சாதனையைப் பெற்றுள்ளார். மிசாத் ஜனவரி 9, 1991 அன்று தனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றதிலிருந்து அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றியுள்ளார்.

ADVERTISEMENT

அனைத்து வாகன ஓட்டிகளும் வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும், வேக வரம்புகளை கடைபிடிக்கவும், தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தவிர்க்க சாலையில் கவனத்துடன் பயணிக்குமாறு அப்துல்லா கலீஃபா  கேட்டுக் கொண்டார்.