ராஸ் அல் கைமாவில் உள்ள மால் ஒன்றில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குழு ஒன்று எல்லை மீறி சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, ராஸ் அல் கைமா காவல்துறையினர் அந்த நபர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தை வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ராஸ் அல் கைமாவின் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக ராஸ் அல் கைமா காவல் துறையினர், சச்சரவுகள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு பரப்பும் குடியிருப்பாளர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அது அமீரகத்தில் தனியுரிமை மீறல், அவதூறு மற்றும் பொது ஒழுக்கங்களை மீறுவதாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.