SPICEJET விமானங்களில் கடந்த மூன்று வாரத்தில் 8 முறை பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த விமானங்கள் புறப்பட்டு சென்று நடுவானில் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்படும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து துபாய் வரவிருந்த விமானம் எரிபொருள் கசிவு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. அதேபோல் மும்பை சென்ற SPICEJET விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவசரமாக தரையிறங்கியது. இதேபோல கொல்கத்தாவில் இருந்து சீனா சென்ற சரக்கு விமானம் ரேடார் பழுதானதால் மீண்டும் கொல்கத்தாவுக்கே திரும்பியது.
கடந்த 3 வாரங்களில் SPICEJET நிறுவனத்தின் 8 விமானங்கள் நடுவானில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து ஆணையம் SPICEJET விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.