ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் 4 திர்ஹம்ஸ் அதிகரிப்பு.. காரணம் என்ன..?

Published: 4 Jul 2022, 10:58 AM |
Updated: 4 Jul 2022, 10:58 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக எரிபெருள் குழுவால் அறிவிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருப்பதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (SRTA) சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும் பெட்ரோல், டீசல் விலையின் அடிப்படையில் தான் டாக்ஸி கட்டணத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாகவும் கூறியது.

ADVERTISEMENT

முன்னதாக ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம், காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 13.5 திர்ஹம்ஸும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரையில், 5 திர்ஹம்ஸ் முதல் 15 திர்ஹம்ஸாக இருந்தது.

தற்போது​​ பெட்ரோல், டீசல் விலை உயர்வால், டாக்ஸி மீட்டருக்கு காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை குறைந்தபட்ச கட்டணமாக 7 திர்ஹம்ஸ் முதல் 17.5 திர்ஹம்ஸாகவும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரையில் 9 திர்ஹம்ஸ் முதல் 19.5 திர்ஹம்ஸாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“எரிபொருள் விலையை தாராளமயமாக்கும் கொள்கையின் அடிப்படையில் டாக்ஸி வாகனங்களுக்கான கட்டணக் கணக்கீட்டின்படி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. டாக்சிகளுக்கான கட்டண அட்டவணையில் திருத்தம் செய்யப்படுவது, பயணிகளுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை மேம்படுத்தவும், இத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு செயல்படவும் SRTA முயற்சிகளின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று SRTA இன் தலைவர் யூசுப் காமிஸ் அல்-உத்மானி தெரிவித்தார்.